Wednesday, November 25, 2009

'எந்திரன்' கதை இதுதான்


ஹீரோவும் வில்லனும் ரஜினிதான் ஆம், எந்திரனில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். 200 வருடங்களுக்குப் பிந்தைய அல்ட்ரா உலகில் ரஜினி ஒரு விஞ்ஞானி. அவரது காதலி ஐஸ்வர்யா. மனிதர்களுக்கு நிகரான சிந்தனைத் திறனுடன் இயங்கும் ரோபோக்களைத் தயாரிக்கும் புராஜெக்ட் ரஜினியிடம். தனக்கான நல்லது, கெட்டதுகளை ஆராய்ந்து செயல்படும் பகுத்தறிவுடன் உலகுக்கு உதவும் ரோபோக்களைத் தயாரிப்பதுதான் ரஜினியின் ஐடியா. நினைத்தது போலவே ஒரு ரோபோவையும் உருவாக்குகிறார்.ரஜினி உருவாக்கிய ரோபோவும் ஒரு ரஜினிதான்!தன் கண்டுபிடிப்பை ரஜினி உலகுக்கு அறிமுகப்படுத்தும் முன், அதில் டெக்னிக்கல் சிக்கலை உண்டாக்குகிறார்கள் அவரது வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள். டிராக் மாறுகிறது ரோபோ ரஜினி.அபார ஐக்யூவும் அசுர பலமுமாக நினைத்தசெயல்களை எந்தத் தடங்கலும் இல்லாமல் செய்கிறது ரோபோ ரஜினி. தனது கட்டளைகளை அடித்துக் கடாசி கலீஜ் செய்யும் ரோபோர ஜினியைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் திகைக்கிறார் ரஜினி. எந்திரனாக இருந்தாலும் அந்த ரோபோ ரஜினிக்கும்ளும் இருக்கிறது ஈர இதயம். ஐஸ்வர்யா மீது ரோபோ ரஜினிக்கும் பூக்கிறது காதல். மற்றவர்களை அடித்துத் துவம்சம் செய்யும் ரோபோ ரஜினி, ஐஸ்வர்யாவிடம் மட்டும் அத்தனை சாஃப்ட்டாக நடந்துகொள்கிறது. அந்த சாஃப்ட் கார்னரை வைத்தே ரோபோ ரஜினியை கார்னர் செய்ய முடிவெடுக்கிறார் விஞ்ஞானி. அதிரடி அடிதடி ஆக் ஷன் காட்சிகளுக்குப்பிறகு சுப கிளைமாக்ஸ் என்கிறார்கள்!ஹாலிவுட் படங்கள் சொல்லாத ரோபோ கதைகள் என்று எதுவுமே இல்லை. ஆனால், எந்திரனில் டெக்னாலஜி அத்தனை உச்சத்தில் இருந்தாலும் காதலுக்கு இருக்கும் ஸ்பெஷல் ஃபீலிங்க்ஸை ரஜினி ஸ்டைலில் சொல்வதுதான் ஹைலைட்.படத்தில் ரஜினிக்குச் சமமாக ஐஸ்வர்யா ராய்க்கும் வேலை இருக்கும் என்பதால், 200 நாட்கள் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் ஷங்கர். அதுவும் ஐந்து தவணைகளில்!படத்தில் ரஜினி வில்லன் என்றாலும், படத்துக்கு நிஜ வில்லனாக ஷாரூக் கான் மல்லுக்கு நிற்கக் கூடாது என்று சின்னக் கவலையுடன் இருக்கிறது ஷங்கர் வட்டாரம். ஷங்கரின் 'முதல்வன்' இந்தி ரீ-மேக்கான 'நாயக்'கில் முதலில் ஷாரூக்தான் நடிப்பதாக இருந்தது.அது சாத்தியப்படாததால் 'ரோபோ'வில் ஷங்கருடன் இணைய ஆவலாக இருந்தார் ஷாரூக். ஆனால், சொல்லமுடியாத காரணங்களால் அதுவும் சாத்தியப்படவில்லை.இப்போது எந்திரன் நிச்சயம் இந்தியில் டப் செய்யப்படும். அப்போது தன்னிடம் சொன்ன கதையின் தலைப்பான 'ரோபோ'வைப் பயன்படுத்த முடியாதபடி தனக்காகப் பதிந்து வைத்துக்கொண்டார் ஷாரூக். ரோபாட், மை ஹீரோ ரோபாட், மெய்ன் ஹூன் ரோபாட் என 9 ரோபாட் தலைப்புகளைப் பதிந்துவைத்திருக்கிறார் ஷாரூக். எந்திரன் ரிலீஸ் ஆவதற்குள் சட்டுபுட்டென்று ஒரு ஜாலி ரோபோ படத்தில் ஷாரூக் நடித்து டெம்போவைக்காலி செய்துவிடக் கூடாது என்பதும் ஷங்கரின் எதிர்பார்ப்பு!அலட்டிக்கொள்ளாமல் 5 கிலோ எடை கூடித்தயாராகிவிட்டார் ரஜினி. எந்திரனுக்காக ஷங்கர் 25புதிய உதவி இயக்குநர்களை நியமித்துள்ளார். அதில் 'மோஸ்ட் வான்டட்' நபர் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

நன்றி நக்கீரன்

No comments: