Wednesday, November 25, 2009

இணையத்தை அச்சடித்தால்...


மரங்களையெல்லாம் பேனாவாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கி, பூமியை அப்படியே விரித்துப் போட்டு காகிதமாக்கி ஆயுள்முழுக்க எழுதினாலும் இறைவனின் பெருமையை நம்மால் எழுதி விட முடியாது என்பார்கள். அது இருக்கட்டும்.நம்ம இணையத்தின் பெருமையை பார்க்கலாமா?. மொத்த இணையத்தையும் நீங்கள் அச்செடுத்துவைத்துக்கலாமே என்ற விபரீத ஆசை கொண்டிருந்தால் அதை நீங்கள் கிமு1800-றிலேயே பாபிலோனியர்களோடு சேர்ந்து தொடக்கியிருக்க வேண்டுமாம். அப்போதுதான் இந்த வருடமாவது அச்செடுத்து முடித்திருப்போம். அதையெல்லாம் நீங்கள் பொறுமையாக படிக்க நினைத்தால் போச்சுது 57,000 ஆண்டுகள் ஆகுமாம். அதுவும் இரவு பகல் விடாது தொடர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அதுவே தினமும் படுக்குமுன் 10 நிமிடம் மட்டும் தான் படிப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் 8,219,088 ஆண்டுகள் ஆகிவிடுமாம். இப்பவே கண்ணக் கட்டுதோ. அப்படியென்றால் இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இதே இணையம் எப்பாடு பட்டிருக்குமோ?

நேற்று அசாத்தியமாய் இருந்தது,இன்று சாத்தியமாகும் அற்புதத்தைஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்

1 comment:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சக்தி,

மிகவும் விந்தையான ஒர் தகவல்...

நன்றி.

இவன்,
தஞ்சை.வாசன்.